search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் ஊடுருவல்"

    ஜம்மு காஷ்மீரில் அவந்திபோராவில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி பாதுகாப்பு படையினர் ராணுவ வாகனங்களில் சென்றபோது தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இதையடுத்து புல்வாமா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் புல்வாமா மாவட்டம் டெலி போராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.

    இதையடுத்து புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் உள்ள பன்ஸ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    பின்னர் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டு எதிர்தாக்குதலில் ஈடுபட்ட னர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நீடித்தது. அப்பகுதியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 3 நாட்களில் புல்வாமாவில் 2-வது முறையாக பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே தேசிய எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. #JammuKashmir #Encounter
    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி அளித்து வருகின்றனர்.

    அதேநேரத்தில் மழைக்காலத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்கின்றனர். ஐம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் அருகே சாகூ அரிசால் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.



    இந்த துப்பாக்கிச்சூடு குறித்த முழு விவரங்கள் வெளியாகாத நிலையில், இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருவதாக இராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. #JammuKashmir #Encounter

    காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் இன்று ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Infiltrationbidfoiled #RajouriLoC #3soldiersmartyred #2intruderskilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பிற்பகல் சுமார் 2 மணியளவில் சுந்தர்பானி செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்த நமது பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகுமாறு எச்சரித்தனர்.

    இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டவாறு முன்னேறி வந்தனர். இதில் இந்தியாவை சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

    தொடர்ந்து அங்கு இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஒரு  இந்திய வீரர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Infiltrationbidfoiled  #RajouriLoC #3soldiersmartyred #2intruderskilled
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்திய போராட்டத்தில் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.#MilitantsInfiltrate
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் தங்டார் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஊடுருவுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு சென்று ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு தடுத்து நிறுத்தினர். இந்த தாக்குதலின் போது ராணுவ வீரர் புஷ்பேந்திர சிங் வீர மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஊடுருவலை தடுத்து நிறுத்திய போரில் புஷ்பேந்திர சிங் வீர மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    ×